உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள சாலமன் தீவுகள் அருகில் புகைப்படம் எடுக்கச் போது சுமார் 300 வருடங்கள் பழைமையான அதிசய பவளப்பாறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் பசுபிக் பெருங்கடல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை ஆராய சென்றபோதே புகைப்படக் கலைஞர் மனு சான் பெலிக்ஸ் என்பவரால் இப் பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப் பவளப்பாறை 104 அடி நீளம், 111 அடி அகலம், 18 அடி உயரம் மற்றும் 183 மீட்டர் சுற்றளவைக் கொண்டது.

நூறாயிரக் கணக்கான சிறிய உயிரினங்களின் வாழ்விடமான இப் பவளப் பாறை நீல திமிங்கிலத்தை விட பெரியது என்று கூறப்படுகிறது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )