பலஸ்தீன மக்களுக்கான தமது முழுமையான ஆதரவை உறுதிப்படுத்திய ஐ.நா

பலஸ்தீன மக்களுக்கான தமது முழுமையான ஆதரவை உறுதிப்படுத்திய ஐ.நா

மனிதாபிமான உதவி, எதிர்கால மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு, பலஸ்தீன மக்களுக்கான தமது முழுமையான ஆதரவை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு அமைதி செயன்முறைக்கான துணை சிறப்பு ஒருங்கிணைப்பாளர், குடியுரிமை மற்றும் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் முஹன்னத் ஹாடி தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகம், நியாயமான மற்றும் நீடித்த அமைதியை ஆதரிக்க கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

குடியிருப்புகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புத் தேவைகளில் இந்தது றை மிகப்பெரிய பங்கை வகிக்கும் என எதிர்பார்கப்படுகிறது.

மீட்பு மற்றும் மறுசீரமைப்பு சவால்களை எதிர்கொள்ள பலஸ்தீனியர்களுக்கு கூட்டு நடவடிக்கை தேவைப்படும் என கூறிய அவர் அடுத்த மூன்று ஆண்டுகளில் மாத்திரம், அத்தியாவசிய சேவைகளை உறுதிப்படுத்தவும் நீண்டகால மீட்புக்கான அடித்தளத்தை அமைக்கவும் 20 பில்லியன் டொலர்கள் தேவைப்படும் என்றும் ஹாடி தெரிவித்தார்.

இதேவேளை,மத்திய கிழக்கில் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. மீட்புப் பணிகள் நிலையம் நடாத்திய பாடசாலைகள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாக கண்டித்துள்ளது.

மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளின் போது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் ஒலி குண்டுகளைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என பொதுச்செயலாளர் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியுள்ளார்.

இதேவேளை, ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஐ.நா.வின் மீற முடியாத வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வன்மையாக கண்டித்துள்ளார்.

 

Share This