புதிய திருத்தந்தையை தெரிவு செய்வதற்கான பணிகள் ஆரம்பம் – மே ஏழாம் திகதி ரகசிய வாக்கெடுப்பு

புதிய திருத்தந்தையை தெரிவு செய்வதற்கான பணிகள் ஆரம்பம் – மே ஏழாம் திகதி ரகசிய வாக்கெடுப்பு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்குப் பின்னர் வெற்றிடமாகியுள்ள அந்தப் பதவிக்கு அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரப்பூர்வ செயல்முறை அமே 7ஆம் திகதி நடைபெறும் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.

இதன்படி, புதிய திருத்தந்தையை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கு தகுதியான கார்டினல்களின் எண்ணிக்கை 135 ஆகும்.

இவர்களில், 53 கார்டினல்கள் ஐரோப்பாவிலிருந்தும், 23 பேர் ஆசியாவிலிருந்தும், 20 பேர் வட அமெரிக்காவிலிருந்தும், 18 பேர் ஆப்பிரிக்காவிலிருந்தும், 17 பேர் தென் அமெரிக்காவிலிருந்தும், நான்கு பேர் ஓசியானியாவிலிருந்தும் தகுதி பெற்றுள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள 71 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கார்டினல்கள் 80 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

வத்திக்கானின் சிஸ்டைன் சேப்பலில் நடைபெறும் இந்த வாக்கெடுப்பு, மிகவும் ரகசியமான வாக்கெடுப்பாகக் கருதப்படுகிறது.

வெளி உலகத்திலிருந்து விலகி நடைபெறும் தவக்கால சடங்குக்காக சிஸ்டைன் தேவாலயம் நேற்று (28) முதல் மூடப்பட்டுள்ளது.

தங்கள் தனித்துவமான சிவப்பு அங்கிகளை அணிந்து வாக்களிக்க வரும் கார்டினல்களின் வாக்குச் சீட்டுகள், போப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு எரிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.

1800களில் இருந்து வரும் இந்த பாரம்பரியத்திற்கான காரணம், வாக்களிப்பின் ரகசியத்தைப் பாதுகாப்பதும், அரசியல் செல்வாக்கிலிருந்து தேவாலயத்தைப் பாதுகாப்பதும் ஆகும்.

தேர்தலுக்குப் பின்னர் வாக்குச் சீட்டுகளை எரிப்பதன் மூலம் வெளியுலகிற்கு ஒரு திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வருகிறது.

அதன்படி, சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வெளிவந்தால், அது கார்டினல்களின் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்று ஒரு புதிய
திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டதைக் குறிக்கிறது.

Share This