பணியிடங்களில் துன்புறுத்தப்படும் பெண்கள் – சஜித் பிரேமதாச

பணியிட வன்முறை மற்றும் பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் காரணமாக நாட்டில் ஒவ்வொரு நபரும் வருடத்திற்கு ஆறு வேலை நாட்களை இழப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (8) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வேலை நாட்கள் இழப்பால் 1.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக
அவர் தெரிவித்தார்.
நாட்டில் ஒன்பது நிறுவனங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை, பணியிடத்தில் 75 வீத ஆண்கள் பெண்களிடம் நியாயமற்ற முறையில் நடந்துகொள்வதாக அறிக்கைகள் காட்டுவதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், இந்த ஆண்கள் பெண்களை வேலைக்கு அமர்த்துவதையும் அவர்களை முன்னேற்றுவதையும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.
நாட்டில் பழமைவாத முதலாளிகள் பணியிடத்தில் பெண்களை வேலைக்கு அமர்த்த தயங்குவதாகவும் அறிக்கை கூறுவதாக சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
இன்று (08) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சு மீதான வரவு செலவு திட்ட குழு விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.