யாழில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்

யாழில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்

யாழ்ப்பாணம் பருத்தித்திறை பொலிஸ் பிரிவில் கற்கோவளம் வராத்துப்பளை பகுதியில் பெண் ஒருவரது சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

தனது தாயரை நேற்று பிற்பகலிலிருந்து காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடிச் சென்றவேளை குறித்த கிணற்றடி பகுதியில் தொலைபேசி சத்தம் ஒலித்துள்ளது.

இந்நிலையில், கிணற்றை அவரது மகன் எட்டிப்பார்த்த வேளை கம்பி வலையால் மூடிய கிணற்றிற்குள் சடலம் காணப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக காணப்படுபவர் மூன்று பிள்ளைகளின் தாயான விமலன் சிந்து என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
Share This