விமான நிலையத்திற்கு நிர்வாணமாக வந்த பெண் – ஒருவரை கடித்தும், இருவரை குத்தியும் காயப்படுத்தியுள்ளார்

விமான நிலையத்திற்கு நிர்வாணமாக வந்த பெண் – ஒருவரை கடித்தும், இருவரை குத்தியும் காயப்படுத்தியுள்ளார்

அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸில் அமைந்துள்ள டல்லாஸ் ஃபோர்த் வொர்த் சர்வதேச விமான நிலையத்தில் நிர்வாணமாக சென்ற பெண் ஒருவர் அங்கிருந்த ஒருவரை கடித்து காயப்படுத்தியதுடன், மேலும் இருவரை பென்சிலால் குத்தியும் வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.

சமந்தா போல்மா என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், கடந்த 14ஆம் திகதி விமான நிலையத்தில் இரண்டு பேரை பென்சிலால் குத்தியதாகவும், உணவக மேலாளர்களில் ஒருவரைக் கடித்து காயப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாணமாக வந்தப் பெண் தன்னை வீனஸ் தெய்வம் என்று கூறிக்கொண்டதாகவும், அவரை கட்டுப்படுத்த முயன்ற உணவக மேலாளரை பென்சிலைப் பயன்படுத்தி தலை மற்றும் முகத்தில் குத்தியுள்ளார்.

மேலும் அவரின் கையை கடித்து காயப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகியுள்ளது.

எவ்வாறாயினும், விமான நிலையத்தின் அவசர கதவின் பின்னால் மறைந்திருந்த பெண் பொலிஸாரினால் கண்டுப்பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து போல்மா பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டதுடன், தான் தனது 8 வயது மகளுடன் பயணம் செய்ததாகவும் பொலிஸாரின் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த பெண் மீது கொடிய ஆயுதத்தைப் பயன்படுத்தி மோசமான தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Share This