சந்தேகமான முறையில் பெண் ஒருவர் கொலை – பொலிஸ் விசாரணை ஆரம்பம்

சந்தேகமான முறையில் பெண் ஒருவர் கொலை – பொலிஸ் விசாரணை ஆரம்பம்

வலஸ்முல்ல, ஹொரேவெல பகுதியில் நேற்று (16) இரவு பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

வலஸ்முல்ல, கொரேவெல கொஸ்ருப்பா தோட்டத்தில் வசித்து வந்த தபான துரகே சுசிலா என்ற 61 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வீட்டில் அவர் தனியாக வசித்து வருவதாகவும், இரவு வேளையில் வீட்டுக்குள் புகுந்த யாரேனும் இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் ஒரே மகன் பாதிரியார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இவரது வீடு அமைந்துள்ள காணியில் காணி வழக்கு இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இக்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This