எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?

எரிபொருள் விலையில் திருத்தம் இன்று மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று(31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த திருத்தங்கள் அறிவிக்கப்படலாம்.

கடந்த மாத திருத்தத்தின் போது எரிபொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டிருந்தன.

இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர்.

இதேவேளை, கடந்த மாத எரிபொருள் விலை திருத்தத்தின் படி 92 ஒக்டேன் ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் உயர்த்தப்பட்டிருந்தது.

92 ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 293 ரூபாவிலிருந்து 305 ரூபாவாக உயர்த்தப்பட்டது.

மேலும், வெள்ளை டீசல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் உயர்த்தப்பட்டது.

 

 

Share This