எம்.பிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படுமா?
![எம்.பிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படுமா? எம்.பிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படுமா?](https://oruvan.com/wp-content/uploads/2025/02/Sri-Lankan-Parliament-Complex.jpg)
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ரத்துச் செய்வதற்கான முன்மொழிவு ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.
தனிநபர் பிரேரணையாக இதனை ரவி கருணாநாயக்க சமர்ப்பித்தார்.
‘ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி ஒரு கருத்தைக் கொண்டிருந்தது. அதை சமூகத்திற்கு இழைக்கும் துரோகமாக மாற்றிவிட்டது.
இதன் காரணமாக, எம்.பி.க்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை சேதமடைந்துள்ளது. அதை மீட்டெடுக்கவே இந்த முன்மொழிவை கொண்டு வந்துள்ளேன்.
மக்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பாராளுமன்றத்தில் பணியாற்றி வருவதால், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே அவசியமாகியுள்ளது” என பிரேரணையை சமர்ப்பித்த ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.