அரசாங்கம் கவிழுமா? அமைச்சர் பிமல் பதில்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முழு பதவிக் காலத்தையும் நிறைவு செய்யும். அதன் பின்னர் மீண்டும் பொது மக்களிடம் சென்று மக்கள் ஆணையை கோரும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் அரசாங்கத்தின் சொத்துக்கள். ஆளும் கட்சிக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை. மிகவும் அன்புடன் அனைவரும் பணியாற்றி வருகிறோம்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரை சமூக வலைதளங்களில் வேண்டுமென்றால் சிறு மகிழ்ச்சியை பெறலாம். மாறாக எமது அரசாங்கத்தில் எவ்வித பிளவுகளும் ஏற்படப்போவதில்லை. அரசாங்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் நேரத்தை வீணாக்க வேண்டாம் என அவர்களிடம் கோருகிறேன்.
அவர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் சேறு பூசும் பிரச்சாரங்களைத் தொடரலாம். ஆனால் அது எம்மை பாதிக்காது என்றார்.