
பாடசாலை போக்குவரத்து வேன் கட்டணம் அதிகரிக்கப்படுமா?
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் கட்டணம் அதிகரிக்கப்படாது என இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்க தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் வேன் கட்டணம் அதிகரித்தால், மாணவர்களின் எண்ணிக்கையும் குறையுமென்றும் பெற்றோருக்கு மேலும் சுமையை ஏற்படுத்த முடியாதென்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எரிபொருள் விலைகள் அதிகரிப்பை தொடர்ந்து சில கட்டண உயர்வுக்கான கோரிக்கையை போக்குவரத்து துறைசார்ந்தோர் விடுத்துவரும் பின்புலத்திலேயே பாடசாலை போக்குவரத்து சங்கம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
TAGS வேன் கட்டணம்
