‘Will’ திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
சிவராமன் இயக்கத்தில் ஃபூட் ஸ்டெப்ஸ் புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் சோனியா அகர்வால், விக்ராந்த் நடிக்கும் திரைப்படம் வில்.
இத் திரைப்படத்தில் சட்டத்தரணியாக சோனியா அகர்வால் நடிக்கிறார்.
ஒரு குடும்பத்தில் ஒரு உயில் ஏற்படுத்தும் பிரச்சினை நீதிமன்றத்துக்கு வழக்காக வருகிறது.
அந்த உயிலின் பின்னால் இருக்கும் தியாகம் பற்றியதாக இவ் வழக்கு அமைந்துள்ளது.
படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.