எரிபொருள் விலை குறைக்கப்படுமா?

எரிபொருள் விலை குறைக்கப்படுமா?

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) பழைய கடன்கள் முழுமையாக தீர்வடைந்ததும், எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.50 வரி நீக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

இன்று (ஜூலை 22) நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ரூ.884 பில்லியன் பெறுமதியான கடனை அரசுத் திறைசேரிக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் கூறினார்.

அந்தக் கடனைச் சீர்செய்யும் நோக்கில் ஒரு லிட்டர் எரிபொருளுக்கு ரூ.50 வரி விதிக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது அந்தக் கடனின் அரைபங்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தொகையும் தீர்வு காணப்பட்டதும், அந்த வரியை நீக்கும் வாய்ப்பை அரசாங்கம் பரிசீலிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

 

CATEGORIES
TAGS
Share This