மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுமா? அரசாங்கம் வெளியிட்ட தகவல்

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுமா? அரசாங்கம் வெளியிட்ட தகவல்

மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி உறுதியளித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் குமார ஜெயக்கொடி பதிலளித்தார்.

இதன்போது அமைச்சர் ஜெயக்கொடி வெளியிட்ட தகவலின்படி, அரசாங்கத்தின் கொள்கை அறிக்கைகளுக்கமைய 3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணம் 30 வீதம் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அவசரப்படாதீர்கள், இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருங்கள். எங்கள் கொள்கை அறிக்கையில் 3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 வீதம் குறைப்பதாகக் கூறப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )