நாட்டில் ஏன் அமைதியை நிலைநாட்ட முடியவில்லை? பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விளக்கம்

நாட்டில் அமைதியை நிலைநாட்ட முடியாததற்கு இரண்டு முக்கிய காரணங்களே உள்ளன. அவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளாகும் என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும், இந்தப் பிரச்சினைகள் பல்வேறு காரணிகளால் ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஊடுருவியுள்ளதாகக் கூறியுள்ள அவர், பாதுகாப்புப் படை அதிகாரிகளும் அவர்களால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சட்டத்தை அவர்கள் செயல்படுத்த வேண்டும். சட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மட்டுமே அமைதியை நிலைநாட்ட முடியும். இன்று அமைதியை நிலைநாட்ட முடியாததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், மற்றொன்று போதைப்பொருள்.
இந்த இரண்டையும் ஒழிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. அவை பல்வேறு காரணிகளால் ஏற்படுகின்றன. ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்கள் நம் மத்தியில் ஊடுருவியுள்ளன. அதிகாரிகளும் அவர்களுக்கு இரையாகிவிட்டனர். நாட்டில் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவது பாதுகாப்பு படையினரின் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.