விமான ஜன்னல்களில் எதனால் துளையிடப்படுகின்றன?
எந்தவொரு வாகனமாக இருந்தாலும் சரி ஜன்னல் பக்கம் இருக்கையைத்தான் நாம் விரும்புவோம் அல்லவா. அதன்படி விமானங்களில் உள்ன ஜன்னலின் அடிப்பகுதியில் ஒரு துளை இருக்கும்.
அது எதற்காகவென என்றாவது யோசித்திருப்போமா?
எத்தனையோ அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் காற்றழுத்தை பராமரிப்பது மிகவும் கடினம். அதேபோல் விமானத்தில் பயணிப்பவர்களுக்கும் காற்றழுத்தம் அதிகமாக இருக்க வேண்டும்.
விமானத்துக்குள் காற்றழுத்தம் குறைந்தால் பயணிகளால் சுவாசிக்க முடியாமல் போகும்.
அதன் காரணமாகவே விமானங்களின் ஜன்னலின் அடிப்பகுதியில் துளை இருக்கும்.
இந்தத் துளை காற்றைக் கடத்தி காற்றழுத்தத்தை பராமரிக்க உதவும். இத் துளைகள் இல்லாவிட்டால் வெளிப்புற காற்றழுத்தத்தின் சமநிலையை பராமரிக்க இயலாது.
அழுத்தம் அதிகரிக்கும்போது ஜன்னல்கள் அழுத்தம் தாங்காமல் உடையக்கூடும்.
எனவே இந்தத் துளை இருந்தால் விமானத்தின் உள்புறம் அழுத்தம் அதிகமாக இருந்தாலும் ஜன்னல்கள் எக் காரணம் கொண்டும் உடையாது.