புதிய சபாநாயகர் யார்? மூன்று பேரின் பெயர்கள் முன்மொழிவு

புதிய சபாநாயகர் யார்? மூன்று பேரின் பெயர்கள் முன்மொழிவு

வெற்றிடமாகவுள்ள சபாநாயகர் பதவிக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பட்டி, லக்ஷ்மன் நிபுன ஆராச்சி ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை எனவும், அடுத்த சில தினங்களில் இறுதி முடிவெடுக்கப்படும் எனவும் தெரியவருகிறது.

எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ள நிலையில், முதலாவது நிகழ்வாக புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்பதும் குறிப்பித்தக்கது.

CATEGORIES
Share This