சாரா ஜஸ்மினை கடத்தியது யார் – சபையில் சற்றுமுன் வெடித்த சர்ச்சை

உயிர்த்த ஞாயிறு சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் சாரா ஜஸ்மினை கடத்தியது யார் என்பது தொடர்பான விசாரணைக்கு தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயார் என முஜிபுர் ரஹ்மான் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாகவும், அதனால் சம்பவம் இடம்பெற்ற போது கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக தற்போதைய பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுர ஜெயசேகரவே இருந்தார்.
எனவே அவரின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தல் விடுத்திருந்தனர்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, இவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது அவர்களின் பிரச்சினை. அது தொடர்பில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
ஆனால் உயிர்த்த ஞாயிறு தொடர்பில் நாட்டு மக்களுக்கு நீதியான முறையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து நாடாளுமன்றில் சற்று சலசலப்பு ஏற்பட்டிருந்தது.
மேலும், அநுர ஜெயசேகர கிழக்கு மாகாணத்தின் கட்டளைத்தளபதியாக இருக்கும் போது தான் சாய்ந்தமருதில் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.
அதன் போதே அங்கு முதலாவது இராணுவ குழு சென்றது என முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதேவேளை, தற்போதைய அரசாங்கத்தில் காவல்துறை பாதுகாப்பு அமைச்சரும் அன்று சாராவின் மூன்றாவது டி.என்.ஏ பரிசோதனை தான் பொருந்துவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது சாரா தொடர்பில் தெரியாது எனக் கூறுகின்றனர்.
தற்போதைய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதனை நாம் வரவேற்கின்றோம்.
இந்த விசாரணைக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பும் வழங்கத் தயாராக இருக்கின்றோம் எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.