நுகர்வோரால் நிராகரிக்கப்படும் வெள்ளை பச்சையரிசி
தம்புள்ளை சந்தைக்கு வழங்கப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்பட்டுள்ள வெள்ளை பச்சையரிசி, நுகர்வோர் மூலம் நிராகரிக்கப்படுவதால் அவற்றை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை பச்சையரிசியை வாங்கி வீட்டிற்கு கொண்டு செல்லும் நுகர்வோர் அவற்றை மீண்டும் கடைகளுக்கு வழங்குவதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, வெள்ளை பச்சையரிசிக்கு அதிக கேள்வி இல்லாததால் விற்பனையாளர்களால் அதனை விற்பனை செய்ய முடியாத சூழல் எழுந்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை பச்சையரிசி கிலோ ஒன்று தம்புள்ளை சந்தைக்கு விநியோகிக்கப்படும் போது 212 ரூபாய் 50 சதம் செலவளிக்கப்படுவதாக கடை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும், அரசாங்கத்தின் அதி விசேட வர்த்தமானியின் அடிப்படையில், இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை பச்சையரிசி கிலோ ஒன்று 210 ரூபாய் என்ற சில்லறை விலைக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளது.
எவ்வாறாயினும், கட்டுப்பாட்டு விலையை மீறி 215 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.