காசாவிற்கான “அமைதி சபை” – உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட்ட வெள்ளை மாளிகை

காசாவிற்கான “அமைதி சபை” – உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட்ட வெள்ளை மாளிகை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் காசாவிற்கான புதிய “அமைதி சபை” (Peace Council) உறுப்பினர்களின் பெயர்களை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

இந்த சபை அமெரிக்க ஜனாதிபதி தலைமையில் செயல்பட்டு, காசாவின் தற்காலிக நிர்வாகம் மற்றும் மீள்கட்டமைப்பு பணிகளை மேற்பார்வை செய்யும்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது “அமைதி சபை” என்று அழைக்கப்படும் குழுவில் முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேரை (ony Blair) நியமித்துள்ளார்.

இந்த பட்டியலில் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் மத்திய கிழக்கிற்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையின் தகவல் படி, நிர்வாகக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் காசாவின் நிலைப்பாட்டுக்கு முக்கியமான பகுதியொன்றை(portfolio) பொறுப்பேற்பார்.

ஆனால் யாருக்கு எந்த முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது இன்னும் தெளிவாக கூறப்படவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உயர் மட்ட உறுப்பினர்களில் பெண்கள் மற்றும் பலஸ்தீனியர்கள் அறிவிக்கப்படவில்லை.

ஆனால் வரும் வாரங்களில் கூடுதல் உறுப்பினர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )