தந்தை – மகன் உறவைக் கூறும் ‘ராமம் ராகவம்’ எப்போது ரிலீஸ்?
கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சங்களில் நடிப்பதில் சமுத்திரக்கனியும் ஒருவர்.
அந்த வகையில் தன்ராஜ் இயக்கத்தில் ராமம் ராகவம் எனும் திரைப்படத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார்.
இத் திரைப்படம் தந்தை – மகன் உறவை அடிப்படையாகக் கொண்டது.
சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்துள்ள நிலையில், இப் படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழு அறிவிதுள்ளது.
இத் திரைப்படம் அடுத்த மாதம் 14ஆம் திகதி வெளியாகவுள்ளது.