கட்டுமானங்களின்போது பச்சை வலை விரிக்க காரணம் என்ன?

கட்டிட வேலைகள் நடக்கும் இடங்களில் குறித்த கட்டுமான பணிகள் ஆரம்பித்தவுடன் கட்டுமானத்தை சுற்றி பச்சை வலை போடுவர். இவ்வாறு பச்சை வலை போடுவதன் பின்னால் இருக்கும் காரணம் குறித்து பலருக்கும் தெரிவதில்லை.
இவ்வாறு பச்சை வலை போர்த்துவது அந்தக் கட்டிடத்தில் வேலை செய்பவர்களின் பாதுகாப்புடன் தொடர்புட்டது. அதாவது, கட்டிடத்தில் வேலை பார்ப்பவர்கள் சில நேரங்களில் வெளியில் நடப்பதைக் கவனிக்கத் தவறலாம்.
இதனால் சில நேரங்களில் அவர்கள் கீழே விழ நேரிடலாம். இதற்கு முன்னெச்சரிக்கையாகத்தான் இந்த பச்சை வலை விரிப்பது.
அதுமட்டுமின்றி அதிக சூரிய ஒளி கட்டிடத்துக்குள் விழுந்தால் அது பணிபுரிபவர்களை விரைவாக சோர்வடையச் செய்யும். அதற்காகவும் இது பயன்படும்.
மேலும் கட்டுமானப் பணிகள் செய்யும் கட்டிடத்தின் தூசிகள் அருகிலிருந்து ஏனைய கட்டிடங்களில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதற்கும் இது பயன்படுகிறது.
அத்துடன் கட்டிடம் கட்டி முடிக்கும்வரையில் மற்றவர்களின் திருஷ்டி கட்டிடத்தின் மேல் விழுவதை தடுக்கவும் இந்த வலை அமைக்கப்படுகிறது.