
இன்றைய தினம் தங்கத்தின் விலை எவ்வளவு?
இலங்கையில் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச மற்றும் உள்ளூர் சந்தை நிலவரங்களுக்கு அமைவாகவே இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 365,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,675 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் இன்று உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்போ அல்லது குறைவோ இன்றி ஸ்திரமாக காணப்படுகிறது.
கடந்த சில நாட்களாக நிலவிய விலையேற்றத்திற்குப் பின்னர் இன்று சந்தையில் சீரான நிலை காணப்படுவதாக வியாபாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
