நாட்டில் நடக்கும் கொலைகளின் பின்புலம் என்ன? அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்

நாட்டில் நடக்கும் கொலைகளின் பின்புலம் என்ன? அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமையப்பெற்றது முதல் பாதாள உலகத்திற்குச் செல்லும் கதவுகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

இதனால்தான் பாதாள உலக நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும், இந்த மோதல்களில் ராஜபக்சர்களுக்கு எதிரான சாட்சிகளே உயிரிழப்பதாகவும் அவர் கூறினார்.

”பாதாள உலகம் தானாக உருவாகவில்லை. சரியான நிர்வாகம் இருந்திருந்தால் பாதாள உலகம் உருவாக்கப்பட்டிருக்காது.

இந்த நாட்டில் செயல்படும் பாதாள உலகம் கடந்தகால அரசியல் அமைப்புகளுடன் தொடர்புடையவை. பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடியாது.

தற்போது இடம்பெறும் பாதாள உலகக் கொலைகள் அனைத்தும் சாட்சியங்களாகும். கடந்த அரசாங்கங்களின் காலத்தில் ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்துதான் பாதாள உலகம் இயங்கியது.” என்றும் கூறினார்.

 

CATEGORIES
TAGS
Share This