வெலிகம துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஏனைய ஆறு சந்தேகநபர்களும் நீதிமன்றில் சரண்

வெலிகம துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஏனைய ஆறு சந்தேகநபர்களும் நீதிமன்றில் சரண்

மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய  ஏனைய ஆறு சந்தேகநபர்களும் மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

அதன்படி, இன்று (21) மனு ஒன்றை முன்வைப்பதன் மூலம் ஆறு சந்தேகநபர்களும் மாத்தறை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மாத்தறை , வெலிகம பிரதேசத்தின் ஹோட்டல் ஒன்றின் முன்னால் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This