
வெலிகம பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரிக்கு பிணை
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (04) காலை சரணடைந்த வெலிகம பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றம் அவரை தலா 5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.
வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக வெலிகம பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சந்தேக நபரான வெலிகம பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நாளை (05) கம்பளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
