வானிலை முன்னறிவிப்பு – இன்று நாட்டின் பல இடங்களில் அடை மழை பெய்யக்கூடும்

வானிலை முன்னறிவிப்பு – இன்று நாட்டின் பல இடங்களில் அடை மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிதமான மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டின் பிற பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என இன்று காலை வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய, மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணி நேரத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This