வானிலை முன்னறிவிப்பு

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்திலும் புத்தளம், காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் காலையில் மழை பெய்யலாம்.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக கடும் காற்றினால் மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் குறைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.