இன்று முதல் ஆசனப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

இன்று முதல் ஆசனப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

அதிவேக பாதையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் இன்று (1) முதல் ஆசனப் பட்டி அணிவது கட்டாயமாகும்.

இது தொடர்பாக இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அதிவேக வீதியில் பஸ்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவதை செப்டெம்பர் மாதம்
முதலாம் திகதி முதல் கட்டயாமாக்க தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பொறியாளர் ஏ.பி. சந்திரபாலா தெரிவித்துள்ளார்.

Share This