சஜித்தின் தலைமைத்துவத்தின் கீழ் நாம் ஒன்றிணைவோம் – முஜிபுர் ரஹ்மான்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தின் கீழ் ஏனைய கட்சிகள் இணைய வேண்டும் என்பதே கட்சியின் யோசனை எனவும் இணையும் கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதும் கட்சியின் கருத்தாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை இணைவதாக பரவி வரும் உத்தியோகபூர்வமற்ற செய்திகள் தொடர்பில் குறித்த சிங்கள ஊடகம் கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனவரி மாதம் 8ஆம் திகதி இரவு இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மேலாண்மைக் குழு கூட்டத்தில் கட்சி கட்டமைப்பை சீர்திருத்துவதற்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டதாகவும், கட்சிக் குழுக்கள் சீர்திருத்த செயல்முறைக்கு ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், “சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தின் கீழ் ஏனைய கட்சிகளை இணைத்துக் கொள்ளும் அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியையும் பரந்த கூட்டணியாக இணைத்துக் கொள்ளும் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த நாம் கலந்துரையாடி வருகிறோம்” என முஜூபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கருத்து தொடர்பில் விமர்சிக்க “ஒருவன்” செய்திச் சேவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை தொடர்பு கொண்ட போது அவர் பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.