தேசபந்து தென்னகோனை நீக்கும் பிரேரணையை ஆதரிப்போம் – சஜித்

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராகக் கொண்டுவரப்படும் எந்தவொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் ஆதரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று (மார்ச் 25) நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமித்தது அரசியலமைப்பை மீறும் செயல் என்றும், இதற்கு முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் சபாநாயகரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியுள்ளார்.
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றில் கொண்டுவர உள்ளது. அதற்கான கையொப்பங்களும் எம்.பிகளிடம் பெற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.