சஜித் இருக்கும்வரை ஆட்சியில் நாமே இருப்போம் – சுனில் ஹந்துன்னெத்தி

சஜித் பிரோமதாச எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் வரை, திசைகாட்டியிடம் அரசாங்கம் இருக்கும் என்று மக்கள் கூறுவதாக கைத்தொழில் மற்றும் நிறுவன மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர்,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கார்ட்டூன் திரைக்கதையில் வரும் வரும் சௌ சௌ போன்றவர் .
தனது ஒரே வேலை எல்லாவற்றையும் வேண்டாம் என்று சொல்வதுதான் அந்த கதாப்பாத்திரத்தின் தன்மை.
இதனால் சஜித் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் வரை, திசைகாட்டி அரசாங்கமே இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்.
நாடு முழுவதும் பல தொழில்துறை விடயங்களை நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். முழுவதும் 19 புதிய தொழில்துறை விடயங்களை நாங்கள் ஆரம்பிக்கவுள்ளோம். இவை ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
சுற்றுலாத் தொழில்கள் அல்லது பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படாத தொழில்களுக்கு ஏற்ற நிலங்களின் பட்டியலை வழங்குமாறு அரசாங்க அதிபர்களிடம் தெரிவித்துள்ளோம்,” என கூறியுள்ளார்.