குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக இரு சிறப்பு ஜனாதிபதி பணிக்குழுக்கள் வேண்டும் – சஜித் பிரேமதாச

குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக இரு சிறப்பு ஜனாதிபதி பணிக்குழுக்கள் வேண்டும் – சஜித் பிரேமதாச

குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக இரு சிறப்பு ஜனாதிபதி பணிக்குழுக்கள் பெயரிடப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்திற்காக ஜனாதிபதி பணிக்குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்காகவும் அதனை செய்ய முடியாமல் இல்லை.

வீட்டிலும், வீதிகளிலும், பணியிடங்களிலும் பெண்களும் குழந்தைகளும் ஒரு பெரிய துயரத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இதற்கு அனைத்துக் கட்சிகளும் இணைந்த ஒரு வேலைத்திட்டம் தேவை. ஒரு முழுமையான திட்டம் தேவை.

ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிக்கவும், குழந்தைகள் மற்றும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்.” எனத் தெரிவித்தார்.

Share This