ஹோமாகம பகுதியில் நாளை நீர் விநியோகத் தடை

ஹோமாகம பகுதியில் நாளை நீர் விநியோகத் தடை

நிலவும் வறட்சியான காரணமாக, ஹோமாகம வலய இலக்கம் 02 இற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (07) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஹோமாகம நகரம், வேகந்த, பின்கெத்த வீதி, வலவ்வ வீதி, கெமுனு மாவத்தை, அத்துருகிரிய வீதி, கலவில வத்தை, நியந்தகல, மாகம்மன, மஹகடுவான, தெனிய மற்றும் தியகம பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,நாளை முற்பகல் 08.00 மணி முதல் பிற்பகல் 08.00 மணி வரை இந்த நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )