
களனி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக குறைவு
களனி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக குறைவடைந்துள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனி கங்கையின் நீர்மட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (02) பிற்பகல் 02.00 மணியளவில் 6.9 அடி ஆக இருந்த நிலையில் பிற்பகல் 03.00 மணிக்கு பின்னர் 6.75 ஆக குறைவடைந்துள்ளது.
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்த நிலையில் களனி கங்கையை அண்மித்த பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES இலங்கை
