மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பெண் படுகொலை செய்யப்பட்டாரா?

மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பெண் படுகொலை செய்யப்பட்டாரா?
கிளிநொச்சி, திருவையாறு பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயாரான 32 வயது பெண் ஒருவர் கொழும்பு மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்தபோது மரணித்துள்ள சம்பவம் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளதுடன், பொலிஸ் நிலையத்தில் எவ்வாறு குறித்த பெண் தற்கொலை செய்துக்கொள்வார் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பினார்.
இந்த விடயம் படுகொலையா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளதால் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
ஆளும் தரப்பில் இதற்கு பதில் அளித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இன்றைய தினத்துக்குள் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிப்பதாகவும் கூறினார்.
Share This