
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்றிரவு 11.30 வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
CATEGORIES இலங்கை
