சொத்து விபரங்களை வெளியிடாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதம்

சொத்து விபரங்களை வெளியிடாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதம்

சொத்து விபரங்களை வெளியிடாத 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கமைய சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இந்த அறிவித்தல் கடிதங்களை அனுப்பியுள்ளார்.

உரிய காலத்தில் குறித்த மக்கள் பிரதிநிதிகள் சொத்து விபரங்களை வெளியிட தவறியுள்ளனர்.

அவர்களின் சொத்து விபரங்கள் உரிய சட்டத்திற்கமைய ஒவ்வொரு வருடமும் மார்ச் 31ஆம் திகதியளவில் காணப்படும் அனைத்து சொத்துக்கள் தொடர்பான விபரங்களையும் வருடத்தில் ஜூன் 30ஆம் திகதிக்கு முன்னர் சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும்.

CATEGORIES
TAGS
Share This