செல்வம் பொழிய வேண்டுமா? இந்தப் பொருட்களை வீட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்

செல்வம் பொழிய வேண்டுமா? இந்தப் பொருட்களை வீட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்

வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் என்பதே அனைவரினதும் ஆசையாக இருக்கும்.

அந்த வகையில் வீட்டில் சில பொருட்களை வைத்திருப்பதன் மூலம் லக்ஷ்மி கடாட்சம் பெருகும்.

வாசனைத் தரக்கூடிய பொருட்களாக கிராம்பு, ஏலக்காய், கற்பூரம் ஆகியவை வீட்டில் இருப்பது நல்லது.

அதிலும் ஏலக்காயை மாலையாகக் கட்டி பூஜையறையில் மகாலக்ஷ்மியின் படத்துக்கு போட்டு வைத்தால் வீடு முழுவதும் வாசனை பெருகி செல்வ வளம் அதிகரிக்கும்.

அந்த வகையில் வெண்மையாக இருக்கும் பச்சரிசி, கல் உப்பு, விராலி மஞ்சள் ஆகியன செல்வத்தை பெருக்கும்.

குளிக்கும்போது, வீட்டைச் சுத்தம் செய்யும்போதும் ஒரு கைப்பிடி கல் உப்பைச் சேர்த்துக் கொண்டால் எதிர்மறையான ஆற்றல் நீங்கும்.

காய்ச்சிய பாலில் சிறிதளவு சீனிச் சேர்த்து கடவுளுக்குப் படைக்கும்போது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

Share This