வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு

வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு

வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று (06.05) காலை ஆரம்பமாகிய நிலையில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், மக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களிப்பதையும் அவதானிக்க முடிகிறது.

வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய ஐந்து சபைகளுக்கும் 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1731 பேர் போட்டியிடுகின்றனர்.

ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 293 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 154 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொலிஸாரின் பாதுகாப்புக்கு அமைதியில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் நடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்காக கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் வாக்கினை பதிவு செய்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வவுனியா மாநகர சபைக்காக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தமது வாக்கினை பதிவு செய்தனர்.

CATEGORIES
TAGS
Share This