
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் – வெளியான அதிர்ச்சியான தகவல்
பீஹாரை விட தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கப்பட்டுள்ளனர்.
சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள பல்வேறு மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, தேர்தல் ஆணையகம் மேற்கொண்டு வருகிறது.
அண்மையில் சட்டசபை தேர்தல் முடிந்த பீஹார் மாநிலத்திலும் எஸ்.ஐ.ஆர்., பணிகள் நடந்திருந்தன. அங்கு வாக்காளர் கணக்கெடுப்பு பணிக்கு முன், 7.89 கோடி வாக்காளர்கள் இருந்தனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது, 7.24 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அதன்படி, 65 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கணக்கெடுப்பு பணிகள் துவங்கும் முன், 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 5.43 கோடி பேர் உள்ளனர். 97.38 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இதன் பிரகாரம் பீஹாரை விட தமிழகத்தில் அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
