2025 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

2025 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான ஒதுக்கீட்டு சட்டமூலம், முதல் வாசிப்புக்காக 2025 ஜனவரி மாதம் 09ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இரண்டாம் வாசிப்பு விவாதம் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி வரை 7 நாட்கள் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
இந்நிலையில், ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை 4 சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்கள் நடைபெற்றதுடன் அதன் மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நடைபெறும்.