கைகள் நடுங்கி பேச முடியாமல் திணறிய விஷால்…என்ன தான் ஆச்சு?
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி சர்க்யூட் நிறுவனங்கள் தயாரிப்பில் விஷால் நடித்துள்ள திரைப்படம் மதகஜராஜா. இத் திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு உருவானது. சில காரணங்களினால் இப் படம் வெளிவராமல் இருந்த நிலையில் சுமார் 12 ஆண்டுகளின் பின்னர் எதிர்வரும் பொங்கலுக்கு ரிலீஸாகிறது.
இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக இயக்குநர் சுந்தர்.சி, குஷ்பூ, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மற்றும் கதாநாயகன் விஷால் அனைவரும் வந்திருந்தனர்.
இதில் விஷால் வந்த நிலை அனைவர் மத்தியிலும் பேசு பொருளாகியுள்ளது. வேட்டி சட்டையுடன் பெரிய கண்ணாடி அணிந்து மிகவும் சோர்வாக வந்திருந்தார். இதனைப் பார்த்த அனைவரும் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லை போல எனப் பேசிக்கொண்டனர்.
படம் குறித்து மேடையில் பேச ஆரம்பித்த விஷாலால் மைக்கைக் கூட பிடிக்க முடியாத அளவுக்கு கைகள் நடுங்கி, பேச்சில் தெளிவின்மை காணப்பட்டது.
நிலைமையை புரிந்துகொண்ட தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி அவரை உட்காரும்படி கூறி அவருக்கு கடுமையான வைரஸ் காய்ச்சல் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் சமூக வலைத்தளத்தில் பலவிதமான கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன.
அதாவது, விஷால் அதிகமாக மதுப்பாவனையில் ஈடுபட்டதால் அவருக்கு கை,கால் நடுக்கம் ஏற்பட்டுள்ளது என ஒரு தரப்பினர் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இன்னும் ஒரு சாரார் அவன் இவன் திரைப்படத்தில் விஷால் நடிக்கும்போது கண்களை மாலைக்கண் போல் வைத்துதான் முழுத் திரைப்படத்திலும் நடித்திருப்பார். அப்போதிலிருந்து அவருக்கு ஒருவித நரம்பியல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதன் விளைவுதான் தற்போது அவரது இந்த நிலைமைக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
இவ்வாறு பல கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்ற நிலையில், கட்டுமஸ்தான உடல்வாகு, கம்பீரமான தோற்றம் என திரையில் சூப்பர் ஹீரோவாக விஷாலைப் பார்த்த அவரது ரசிகர்கள் அந்த விஷால் மறுபடியும் திரும்பி வருவாரா? என்ற கவலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.