மற்றுமொரு புதிய மைல்கல்லை எட்டினார் விராட் கோலி

மற்றுமொரு புதிய மைல்கல்லை எட்டினார் விராட் கோலி

இந்திய அணியின் நட்சத்திர் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்கையில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதன்படி இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் 13 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் இந்திய வீரர் மற்றும் உலகின் ஐந்தாவது வீரர் என்ற பெருமையைப் விராட் கோலி பெற்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியின் போது அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் கோலி 42 பந்துகளில் 67 ஓட்டங்களை குவித்தார்.

எட்டு நான்கு ஓட்டங்கள், இரண்டு ஆறு ஓட்டங்கள் அடங்களாக 159.52 சராசரியில் அவர் இந்த ஓட்டங்களை குவித்திருந்தார்.

2025 ஐபிஎல்லில் விராட் கோலி, இதுவரை நான்கு போட்டிகளில் 164 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் இரண்டு அரைச்சதங்களும் அடங்கும்.

இந்நிலையில், தனது ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வாழ்க்கையில், கோலி தற்போது 13 ஆயிரம் ஓட்டங்களை குவித்துள்ளார். 403 போட்டிகளில் விளையாடி அவர் இந்த ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதில் ஒன்பது சதங்கள் மற்றும் 99 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 122 ஓட்டங்களை குவித்துள்ளார்.

போட்டி முடிந்த பின்னர் பேசிய விராட் கோலி, நவீன கால டி20 கிரிக்கெட்டில் தகவமைப்பு மற்றும் புதுமைகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This