
தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லைப் பகுதிகளில் மீண்டும் வன்முறை தீவிரம்
தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லைப் பகுதிகளில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்வதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் தாய்லாந்து சிப்பாய் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கம்போடியா இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தாய்லாந்து இராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கம்போடியாவின் வடக்கு எல்லை மாகாணங்களான பிரியா விஹார் மற்றும் ஒட்டார் மீஞ்சே பகுதிகளில் தாய்லாந்து படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொதுமக்கள் உயிரிழந்ததாக கம்போடிய அரசு குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டிருந்த நிலையில், அதன் பின்னர் ஏற்பட்டுள்ள மிகக் பெரிய மோதல் இதுவென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
