
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறையே தேசிய அவசரநிலை – பிரித்தானியா
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை பிரித்தானிய அரசு “தேசிய அவசரநிலை” என அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களை விசாரிக்க தனிப்பட்ட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.
2029 ஆம் ஆண்டுக்குள் அனைத்து பொலிஸ் படைகளிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பாதுகாப்பு பிரிவுகள் உருவாக்கப்படும் என உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு துஷ்பிரயோகத்தை தடுக்க புதிய பாதுகாப்பு உத்தரவுகள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுத்தப்பட்டு குற்றம் செய்பவர்களுக்கு ஊரடங்கு, மின்னணு கண்காணிப்பு மற்றும் குறிப்பிட்ட இடங்களில் நுழைய தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை மீறினால் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
நிகழ்நிலை வழியாக நடைபெறும் வன்முறைகளை தடுக்க, அரசு £2 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளது.
முன்னதாக இதேபோன்ற நடவடிக்கைகள் மூலம் 1,700 க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
