2024ஆம் ஆண்டின் பிஃபாவின் சிறந்த வீரராக வினிசியஸ் ஜூனியர் தெரிவு
2024ஆம் ஆண்டின் பிஃபாவின் சிறந்த வீரருக்காக விருதை பிரேசில் தேசிய அணியின் வீரரும், ரியல் மெட்ரிடின் அணியின் வீரருமான வினிசியஸ் ஜூனியர் பெற்றுள்ளார்.
வினிசியஸ் தனது விளையாட்டு வாழ்க்கையில் முதல் முறையாக பிஃபா சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார்.
மன்செஸ்டர் சிட்டியின் பலோன் டி’ஓர் விருது வென்ற ரோட்ரி, ரியல் மெட்ரிட் அணியின் கைலியன் எம்பாப்பே மற்றும் எர்லிங் ஹாலண்ட் ஆகியோரை பின்தள்ளி வினிசியஸ் ஜூனியர் இந்த விருதைப் பெற்றுள்ளார்.
இதனிடையே, சிறந்த வீராங்கனைக்கான விருதை பார்சிலோனா அணியின் ஸ்பெயின் நட்சத்திர வீராங்களை அயிட்டனா பொன்மதி இரண்டாவது முறையாக கைப்பற்றியுள்ளார்.
அதேபோல், சிறந்த கோலுக்கான புஸ்காஸ் விருது மான்செஸ்டர் யுனைடெட்டின் அலெக்ஸாண்ட்ரோ கர்னாசோவவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பெண்கள் பிரிவில் சிறந்த கோலுக்கான ‘மார்த்தா விருதை’ வென்று மற்றொரு சரித்திரம் படைத்தார் பிரேசில் அணியின் வியரா டா சில்வா பெற்றுக்கொண்டார்.
விருது வழங்கும் நிகழ்வு கத்தாரில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றிருந்தது.
ஏனைய விருதுகள்…
சிறந்த பயிற்சியாளர்: கார்லோஸ் அன்சிலோட்டி (ரியல் மெட்ரிட்)
சிறந்த பெண் பயிற்சியாளர்: எமா ஹெய்ன்ஸ் (செல்சி)
சிறந்த ஆண்கள் கோல்கீப்பர்: எமிலியானோ மார்ட்டினெஸ் (அர்ஜென்டினா, அஸ்டன்வில்லே)
மகளிர் கோல்கீப்பர்: அலிசா நோயர் (அமெரிக்கா)