விஜயின் சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

தமிழகத்தின் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்குண்டு பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.