விடாமுயற்சி ரிலீஸ்…ஆட்டம் பாட்டத்தில் அஜித் ரசிகர்கள்

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று உலகளாவிய ரீதியில் ரிலீஸானது.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் இத் திரைப்படத்தின் முதல் காட்சி காலை 5 மணிக்கு ஆந்திரா, கர்நாடாகா போன்ற மாநிலங்களில் திரையிடப்பட்டது. தமிழ்நாட்டில் காலை 9 மணி முதல் சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து அஜித் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் படத்தை கொண்டாடி வருவதோடு, அஜித்தின் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகமும் செய்து வருகின்றனர்.