அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் இன்று தீர்ப்பு

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் இன்று தீர்ப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்புக் காவலர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று (11) அறிவிக்கப்பட உள்ளது.

கம்பஹா உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நீண்ட காலமாக விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட உள்ளது.

கடந்த 13ஆம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டவிருந்த நிலையில், ​​தீர்ப்பு அறிவிப்பு இன்றைய திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நீண்ட காலமாக விசாரிக்கப்பட்டது.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது 2022ஆம் ஆண்டு மே ஒன்பதாம் திகதி நிட்டம்புவ பகுதியில் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்புக் காவலர்களைத் தாக்கி கொலை செய்ததாக 42 பேர் மீது சட்டமா அதிபர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )